லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

100 நாள்களில் ரூ.4988 கோடி வருவாய்: பதிவுத்துறை சாதனை

நடப்பாண்டு ஏப்ரல் 1 முதல் ஜூலை 12 வரை 100 நாள்களில் ரூ.4988 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :13 ஜூலை 2022, 7:05 am

DIN

சென்னை: நடப்பாண்டு ஏப்ரல் 1 முதல் ஜூலை 12 வரை 100 நாள்களில் ரூ.4988 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.

பத்திரப்பதிவு துறையில் அமைச்சர் மூர்த்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் காரணமாக இதுவரை இல்லாத அளவில் பத்திரப்பதிவு துறை அதிக வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

2021 ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.2,577.43 கோடி கிடைத்த நிலையில், தற்போது ரூ.4988 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.

சென்ற ஆண்டை விட ரூ.2,410.75 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.