காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜூலை 17-ல் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 17ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

Updated On :13 ஜூலை 2022, 7:13 am

DIN

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 17ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டத்தை கட்சித் தலைமை கூட்டியுள்ளது.

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே, பாஜக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.