ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கீழடி அகழ் வைப்பகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வைப்பக கட்டுமானப் பணிகளை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு புதன்கிழமை ஆய்வு செய்தார்.

News image
கீழடியில் அகழ் வைப்பக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு.
Updated On :13 ஜூலை 2022, 7:16 am

DIN

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ் வைப்பக கட்டுமானப் பணிகளை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு புதன்கிழமை ஆய்வு செய்தார்.

கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களிலும் 8-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களை காட்சிப்படுத்துவதற்காக கொந்தகை வருவாய் கிராமத்துக்குள்பட்ட பகுதியில் ரூ.11.03 கோடியில் அகழ் வைப்பகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உலக தரத்தில் நவீன வசதிகளுடன் 31919 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்படும் இந்த அகழ் வைப்பகத்தில் நிர்வாக கட்டடம், கல் தொல் பொருள் காட்சிக் கூடம், உலோக தொல்பொருள் காட்சிக் கூடம், திறந்தவெளி அரங்கம், மணிகள் மற்றும் தொல்பொருட்கள் காட்சிக் கூடம், விலங்குகள் குறித்த தொல்பொருள் காட்சிக் கூடம், சுடுமண் பானைகள் தொல்பொருள் காட்சிக் கூடம் என தனித்தனியே அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று இன்னும் ஓரிரு வாரங்களில் திறக்கப்பட உள்ளன.

Story image

அமைச்சர் எ.வ.வேலுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, மானாமதுரை எம்எல்ஏ தமிழரசிரவிக்குமார் உள்ளிட்டடோர்.

இந்நிலையில், தமிழகப் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு புதன்கிழமை பார்வையிட்டார்.

அவருடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, மானாமதுரை எம்எல்ஏ தமிழரசிரவிக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.