காரைக்காலில் மாங்கனித் திருவிழா: மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் வேண்டுதல்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற மாங்கனித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மாங்கனிகளை இறைத்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
காரைக்காலில் மாங்கனித் திருவிழா: மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் வேண்டுதல்
Published on
Updated on
1 min read

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற மாங்கனித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மாங்கனிகளை இறைத்து வேண்டுதல் நிறைவேற்றினர்.

63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவரும், அம்மை அப்பன் இல்லாத இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றினை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மாங்கனி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 

சுமார் 1600 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வை இன்றும் நம் கண்முன் கொண்டு வரும் அத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாங்கனி இறைத்தல் இன்று காரைக்காலில் நடைபெற்றது. முக்கனிகளில் முதற்கனியான மாங்கனிக்கு முக்கியத்துவம் அளித்து நடத்தப்படும் மாங்கனித் திருவிழா கடந்த 11-ம் தேதி இரவு அனுக்ஜை விக்னேஸ்வர பூஜை, மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. 

முக்கிய நிகழ்ச்சி இன்று காலை பரமசிவன் பிச்சாண்டமூர்த்தியாக எழுந்தருளி பவழக்கால் விமானத்தில் பத்மாசனமர்ந்து வேதபாராயணத்துடன் வாத்தியங்கள் முழங்க வீதியுலா நிகழச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வதற்காக வீடுகளிலிருந்தும் வீட்டு மாடிகளிலிருந்தும் மாம்பழங்களை வீசி எறிவதும் அம்மாம்பழங்களை கீழே நிற்கும் பக்தர்கள் தாவித்தாவிப் பிடிப்பதும் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. பக்தர்கள் வீசியெறியும் மாம்பழங்களைப் பிடித்து உண்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  

மாங்கனி திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காரைக்காலில் வந்து குவிந்தனர். ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மாங்கனிகளை இறைத்து வேண்டுதல் நிறைவேற்றி வருகின்றனர். இதனால் காரைக்கால் முழுவதும் திருவிழா கோலம் கொண்டுள்ளது.

கணவர் பரமதத்தர் வீட்டிற்கு அனுப்பிய 2 மாம்பழங்களில் ஒன்றை சிவனடியாருக்கு அமுதிட்டு, பின்னர் இறைவன் சிவபெருமானிடம் வேண்டி அதிமதுர மாங்கனியை காரைக்கால் அம்மையார் பெற்றதாக ஐதீகம். இவ்வரலாற்றுச் சம்பவத்தை நினைவுகூரும் விதமாகத்தான் ஆண்டுதோறும் காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com