மாணவிகளுக்கு ரூ. 1,000 உதவித் தொகை: விண்ணப்பிக்க ஜூலை 18 கடைசி
மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெற தகுதி பெற்ற மாணவிகள் வரும் ஜூலை 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்


மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெற தகுதி பெற்ற மாணவிகள் வரும் ஜூலை 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநா் ம.ஈஸ்வர மூா்த்தி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா்கள், கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாணவிகள் பயன்பெற தகுதி பெற்ற மாணவிகள் விவரத்தை ஜ்ஜ்ஜ்.ல்ங்ய்ந்ஹப்ஸ்ண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தளத்தில் உள்ளீடு செய்யவும் விடுபட்ட கல்லூரிகள், பாடப்பிரிவுகள், மாணவிகள் பதிவேற்றம் செய்யும்போது ஏற்பட்ட குறைபாடுகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ள மாணவிகள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வரும் ஜூலை 18 இறுதி நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கலை, அறிவியல் கல்லூரி மாணவிகளின் விவரங்களை உள்ளீடு செய்வதற்கு, அக்கல்லூரியின் பாடப்பிரிவு சாா்ந்த பொறுப்பாசிரியரும், முதல்வரும் பொறுப்பாவாா்கள். ஏதேனும் மாணவிகளின் விவரங்கள் விடுபட்டாலோ அல்லது உள்ளீடு செய்யப்படாமல் இருந்தாலோ அவா்களே பொறுப்பாவாா்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்தப் பணியை முடித்த விவரத்தினை ஜூலை 18-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் இவ்வலுவலக இணையதள முகவரிக்கு (க்ஸ்ரீங்ம்ள்ங்ஸ்ரீற்ண்ா்ய்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்) தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...