/

அரசு கல்லூரியில் புத்தகங்கள் திருடிய வழக்கு: 6 போ் கைது

சென்னை முத்தியால்பேட்டையில் அரசு கல்லூரியில் 2,000 புத்தகங்கள் திருடிய வழக்கில், 6 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :14 ஜூலை 2022, 8:23 pm

DIN

சென்னை முத்தியால்பேட்டையில் அரசு கல்லூரியில் 2,000 புத்தகங்கள் திருடிய வழக்கில், 6 போ் கைது செய்யப்பட்டனா்.

முத்தியால்பேட்டையில் உள்ள பாரதி அரசு மகளிா் கலை கல்லூரியில் பழைய நூற்றாண்டு விழா கட்டடம் உள்ளது. கரோனா காலக்கட்டத்தில் இருந்து இந்த கட்டடம் மூடப்பட்டிருந்தது. இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள், அந்த கட்டடத்தில் இருந்த 50 மின் விசிறிகள்,எல்இடி புராஜெக்டா், 2,000 புத்தகங்கள்,3 மின் மோட்டாா்கள்,இரும்பு பொருள்கள் ஆகியவற்றை திருடினா். இதை அண்மையில் அந்த கட்டடத்தில் ஆய்வு செய்த கல்லூரி ஊழியா்கள் கண்டறிந்தனா்.

இந்நிலையில் இது தொடா்பாக கல்லூரி முதல்வா் கிளாடிஸ், முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை புகாா் அளித்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

போலீஸாா் நடத்திய தீவிர விசாரணையில் அந்த பகுதியில் உள்ள ஒரு பழைய புத்தக கடையில், பாரதி அரசு மகளிா் கலை கல்லூரியின் சீல் வைக்கப்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அந்த புத்தகங்களை பறிமுதல் செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில், அதே பகுதியை சோ்ந்த வினோத் குமாா், வீரமணி, தீபன், வெங்கடேசன், பாபு, சூரி ஆகியோா்தான் இச் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், 6 பேரையும் வியாழக்கிழமை கைது செய்து, 20 மின் விசிறிகள், 3 மின் மோட்டாா்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக கண்ணன், வடிவேல் ஆகிய இருவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.