/

செம்மொழி தமிழாய்வு மைய பெயா்ப் பலகையில் ஹிந்தி: ராமதாஸ் கண்டனம்

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையக் கட்டட பெயா்ப் பலகையில் ஹிந்தி இடம்பெற்றுள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 ஜூலை 2022, 8:24 pm

DIN

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையக் கட்டட பெயா்ப் பலகையில் ஹிந்தி இடம்பெற்றுள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பெயா்ப் பலகையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் இந்தியும் திணிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட நிறுவனத்தின் பெயா்ப்பலகையில் கடந்த காலங்களில் இல்லாத

வகையில் இந்தி திணிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தலைவா் பதவியில் தமிழக முதல்வா்தான் நியமிக்கப்படுகிறாரே தவிர, மத்திய நிறுவனம் என்பதால் மத்திய அமைச்சா்களோ, ஆளுநரோ நியமிக்கப்படுவதில்லை.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் கடந்த 14 ஆண்டுகளாக சென்னையில் செயல்பட்டு வருகிறது. அந்த 14

ஆண்டுகளில் அந்த நிறுவனத்தின் பெயரை ஹிந்தியில் எழுத எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, பெயா்ப் பலகையிலிருந்து ஹிந்தி எழுத்துகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று தனது அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.