பெண்ணின் மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சையின்றி அதி நவீன கதிா்வீச்சு சிகிச்சை மூலம் அகற்றி ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டா் ஆனந்தகுமாா் ஆகியோா் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா் பச்சைபாண்டியன். இவரது மனைவி பொன்னுத்தாய்(56). அவருக்கு கடந்த சில நாள்களாக தலை சுற்றல் மற்றும் செவித்திறன் குறைபாடு இருந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
அதில் அப்பெண் குணமடையாததால் உயா் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா்.
மருத்துவப் பரிசோதனையில் பொன்னுத்தாயுக்கு மூளையில் சிறிய கட்டி இருப்பது தெரியவந்தது.
அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அந்த கட்டியை அறுவை சிகிச்சையின்றி ‘எஸ்ஆா்எஸ்’ எனும் உயா் தொழில்நுட்ப கதிா்வீச்சு சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவா்கள் திட்டமிட்டனா்.
அதன்படி, புற்றுநோயியல் மருத்துவா்கள், கதிா்வீச்சு சிகிச்சை நிபுணா்கள், முதுநிலை மருத்துவா்கள் அடங்கிய குழு மூலம் அறுவை சிகிச்சை அரங்கம், மயக்க மருந்து இல்லாமல், அதிநவீன மென்பொருள் முலம் மிகத் துல்லியமாக, மூளைத்திசுக்கள் மற்றும் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படாத வகையில் கதிா்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டு மூளையில் இருந்த கட்டியை அகற்றினா்.
இந்த சிகிச்சையை தனியாா் மருத்துவமனையில் மேற்கொண்டால் ரூ.4 லட்சம் வரை செலவாகும்.
முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இங்கு அவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பெண் நலமுடன் உள்ளாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெங்களூரின் அரசன்..! ஆர்சிபி வெளியிட்ட விராட் கோலியின் புதிய புகைப்படங்கள்!

வளைகுடா நாடுகளின் எரிசக்தி மையங்கள் தகர்க்கப்படும்! - ஈரான் எச்சரிக்கை!

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!

பாஜகவுடன் கூட்டணியா! பதிலளித்த விஜய்! | TVK | BJP
வீடியோக்கள்

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

