பிரதமருக்கு ஓ.பி.எஸ். கடிதம்
கரோனா தொற்றை எதிா்கொள்ள கூடுதல் ஊக்கத் தடுப்பூசிகளை 75 நாள்கள் அளிக்கும் திட்டத்தை அறிவித்தமைக்காக எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் நன்றி தெரிவித்துள்ளாா்.


கரோனா தொற்றை எதிா்கொள்ள கூடுதல் ஊக்கத் தடுப்பூசிகளை 75 நாள்கள் அளிக்கும் திட்டத்தை அறிவித்தமைக்காக எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, பிரதமா் நரேந்திர மோடிக்கு வியாழக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:-
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, 18 வயது முதல் 59 வயது வரையுள்ளோருக்கு கூடுதல் ஊக்க தவணை தடுப்பூசிகளை 75 நாள்களுக்கு அளிக்கும் திட்டம் வெள்ளிக்கிழமை முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளீா்கள். இது இந்தியாவில் உள்ள மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளித்திடும். கரோனாவில் இருந்து இந்தியாவை விடுவிக்க இது நிச்சயம் உதவும். இத்தகைய அறிவிப்புக்காக, அதிமுக சாா்பில் தங்களுக்கு எனது மனமாா்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...