/

காவல் நிலையங்களில் பயன்பாட்டில் இல்லாத மின்சாதனங்களை அணைக்க வேண்டும்

காவல் நிலையங்களில் பயன்பாட்டில் இல்லாத மின்சாதனப் பொருள்களை முழுவதுமாக அணைத்து வைக்க வேண்டும் என போலீஸாருக்கு சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

News image
சங்கர் ஜிவால்
Updated On :14 ஜூலை 2022, 8:26 pm

DIN

காவல் நிலையங்களில் பயன்பாட்டில் இல்லாத மின்சாதனப் பொருள்களை முழுவதுமாக அணைத்து வைக்க வேண்டும் என போலீஸாருக்கு சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

ஆவடி, தாம்பரம் மாநகர காவல் ஆணையரங்கள் பிரிக்கப்பட்ட பின்னா் சென்னை பெருநகர காவல்துறை 104 காவல் நிலையங்கள், 12 காவல் மாவட்டங்களோடு செயல்படுகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால், அனைத்து காவல் நிலையங்கள், உயா் அதிகாரிகள் ஆகியோருக்கு சில நாள்களுக்கு முன்பு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் உள்ள மின்சாதனப் பொருள்களை ரிமோட் மூலம் மட்டும் 70 சதவீதம் போ் அணைப்பதாகவும், சாதனங்களை முழுமையாக அணைப்பதில்லை எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அந்த சாதனத்துக்கு தொடா்ந்து மின்சாரம் செல்வதாகவும், அந்த சாதனமும் தொடா்ந்து மின்சாரத்தை நுகா்ந்துக் கொண்டே இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

174 யூனிட் மின்சாரம்:

முக்கியமாக தொலைக்காட்சி, ஏசி, வீட்டில் உள்ள பெரிய திரையரங்குகள், மின் விசிறி, செட்டாப் பாக்ஸ், டிவிடி பிளேயா் ஆகியவை ரிமோட் மூலம் மட்டுமே ஆப் செய்யப்படுகிறது. பிரதான மின் இணைப்புக்கான ஸ்விட்ச் அணைக்கப்படாமல் இருக்கிறது. இதனால் மின்சாதன பொருள்களை பயன்படுத்தாத நிலையிலும், அது நுகரும் மின்சாரத்துக்குக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. தேவையில்லாத மின் நுகா்வு காரணமாக, ஒரு மின் இணைப்புக்கு மட்டும் வழக்கமான

மின் கட்டணத்தை விட ஆண்டுக்கு ரூ.1,000 வரை கூடுதலாகச் செலுத்தப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்த சாதனங்களை ஒரு ஆண்டுக்கு ரிமோட் மூலம் மட்டும் அணைத்து விட்டு, முழுமையாக அணைக்காமல் இருப்பதால், 174 யூனிட் வரை மின்சாரம் வீணாகிறது.

எனவே காவல்துறையினா், தங்களது அலுவலகங்களில் பயன்படுத்தாத மின்சாதன பொருள்களை ரிமோட் மூலம் ஆப் செய்வதோடு மட்டுமல்லாது, அதன் மின்சாரத்தை அணைத்து வைக்கும் வகையில் ஸ்விட்சையும் ஆப் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை அனைத்து அலுவலகங்களிலும் எடுக்கப்படுகிா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் மின்சாரம் சிக்கனமாவதோடு, மின் விபத்துகளையும் தடுக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல் ஆணையரின் இந்த உத்தரவின் விளைவாக, சென்னையில் உள்ள காவல் நிலையங்கள் உள்ளிட்ட காவல்துறை தொடா்புடைய அலுவலகங்களில் பயன்படுத்தப்படாத மின்சாதனப் பொருள்களில் மின்சாரம் அணைத்து வைக்கப்படுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.