ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகமானதால் மின் உற்பத்தி அதிகரிப்பு!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் லோயர் கேம்ப் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. 

News image
முல்லைப் பெரியாறு அணை
Updated On :14 ஜூலை 2022, 6:06 am

DIN


கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் நீர்வரத்து அதிகமாக வருகிறது, அதே நேரத்தில் தமிழக பகுதிக்கு திறந்து விடும் நீரும் அதிகமாக இருப்பதால் லோயர் கேம்ப் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. 

முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதிகளான முல்லையாறு, பெரியாறு, தேக்கடி ஏரியில் கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. 

வியாழக்கிழமை பெரியாற்றில் 67.0 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில், 32.2 மி.மீ., மழையும் பெய்தது. இதனால் அணைக்குள் வினாடிக்கு 5,258 கன அடி தண்ணீர் வந்தது, புதன்கிழமை அணைக்குள் வினாடிக்கு 2,738 கன அடி தண்ணீர் வந்த நிலையில், வியாழக்கிழமை, வினாடிக்கு, 5,258 கன அடி தண்ணீர் வந்து, ஒரே நாளில் வினாடிக்கு, 2,520 கன அடி தண்ணீர் கூடுதலாக வந்தது. இதே போல் அணைக்குள் நீர் இருப்பு ஒரே நாளில், 306 மில்லியன் கன அடி அதிகரித்தது. நீர் வெளியேற்றமும் வினாடிக்கு 44 கன அடி கூடுதலாக வந்தது.

Story image

லோயர் கேம்ப் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையம்

அணை நிலவரம்: வியாழக்கிழமை அணையின் நீர்மட்டம்,130.80 அடி உயரமாக இருந்தது, (மொத்த உயரம் 142 அடி), அணைக்குள் நீர் இருப்பு 4,896 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள்  நீர் வரத்து வினாடிக்கு, 5,258 அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு, 1,722 கன அடியாகவும் இருந்தது.

மின் உற்பத்தி அதிகரிப்பு:  லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில், தமிழக பகுதிக்கு திறந்து விடும் நீரின் அளவு அதிகமாக இருந்தது. வினாடிக்கு, 1,722  கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், நான்கு மின்னாக்கிகளில் மூன்று மின்னாக்கியில் தலா 40 மெகாவாட்டும்,  மற்றொரு மின்னாக்கியில் 34 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. 

கடந்த ஜூலை 4 ஆம் தேதி முதல் மின் உற்பத்தி 148 மெகாவாட்டாக இருந்தது, வியாழக்கிழமை முதல் 6 மெகாவாட் உற்பத்தி அதிகரித்து, மொத்தம் 154 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.