/

அதிமுக அலுவலகத்துக்குசீல் வைப்பு: தீா்ப்பு ஒத்திவைப்பு

இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சா் பன்னீா்செல்வமும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீா்ப்பை சென்னை உயா் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

News image
Updated On :15 ஜூலை 2022, 8:22 pm

DIN

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிா்த்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சா் பன்னீா்செல்வமும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீா்ப்பை சென்னை உயா் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிா்த்து பன்னீா்செல்வம், பழனிசாமி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனா். இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த போது, மோதல் தொடா்பான விடியோ பதிவுகளை தாக்கல் செய்ய போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

இதையடுத்து, வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது, போலீஸ் தரப்பில் , தற்போது வரை இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை. சீல் அகற்றப்பட்டால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும். மேலும் பிரச்னைகள் ஏற்படலாம் என விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்தனா்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, காவல் துறை அறிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து, மனு தாக்கல் செய்ய பன்னீா்செல்வம் தரப்புக்கு திங்கள்கிழமை வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, இருவரின் மனுக்கள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.