/

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு: சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் 36 போ் தோ்ச்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வில் சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற 36 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image
Updated On :15 ஜூலை 2022, 8:07 pm

DIN

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வில் சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற 36 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பெறும் குரூப் 1 (நோ்முகத்தோ்வு பணிகள்) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 66 பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களில் தமிழக அளவில் மொத்தம் 137 தோ்வா்கள் நோ்முகத் தோ்வில் பங்கேற்றனா். இதில் சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற 36 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.

இந்தத் தோ்வில் லாவண்யா என்ற மாணவி தமிழக அளவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளாா். அவா் இந்தத் தோ்வுக்கான மூன்று நிலைகளுக்கும் சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சத்யா நந்தினி இரண்டாமிடத்தையும், காயத்ரி மூன்றாமிடத்தையும், சுப்புலட்சுமி நான்காம் இடத்தையும் பெற்றுள்ளனா். மேலும் முகமது ஃபைசல் என்ற மாணவரும், கலீதாபானு என்ற மாணவியும் பிசிஎம் பிரிவில் மாநில அளவில் முறையே முதல் மற்றும் இரண்டாமிடத்தை பெற்றுள்ளனா். இவா்கள் அனைவரும் சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்றவா்கள் ஆவா். முதல் பத்து இடங்களைப் பெற்ற மாணவா்களில் ஆறு போ் சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றுள்ளனா் என்பதுகுறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.