கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

இந்த மாவட்டக்காரர்கள் குடை எடுத்துச் செல்லுங்கள்: தமிழ்நாடு வெதர்மேன்

இடியுடன் கூடிய கனமழை சென்னை மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில்  இன்றே தொடங்கிவிடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

News image
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழைவாய்ப்பு
Updated On :1 பிப்ரவரி 2024, 9:48 am

DIN


சென்னை: இடியுடன் கூடிய கனமழை சென்னை மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில்  இன்றே தொடங்கிவிடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, மேற்குமலைத் தொடர்ச்சிப் பகுதியில் மழை மெல்ல குறைய குறைய, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சன்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்கள், இதர உள் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

தமிழகத்தில் மேற்கண்ட பகுதிகளில் இனி வரும் நாள்களில், பகலில் நல்ல வெயிலும் அதனைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழையும் பெய்யும். அதுவும் இந்த மாடல் இன்று முதல் பல இடங்களில் தொடங்கும் என்று கூறியிருக்கிறார்.

நினைவில் வைத்திருங்கள்.. இந்த மழையானது மாவட்ட அளவில் பரவலாக இருக்காது. இன்று உங்கள் பகுதியில் மழை பெய்யாவிட்டால் நாளை மாலை மற்றும் இரவுகளில் நிச்சயமாக மழை பெய்யும். எனவே, இன்றிலிருந்து எங்குச் சென்றாலும் கையில் குடை எடுத்துச் செல்லுங்கள். திடீர் திடீரென இடியுடன் மழை பெய்யும்.

நீலகிரி, வால்பாறை பகுதிகளில் பெய்து வந்த கனமழை நாளை முதல் படிப்படியாகக் குறையும். மேட்டூர் அணை நிரம்பிவிட்டது. பரப்பிக்குளும் 2 - 3 நாள்களில் நிரம்பவிருக்கிறது. முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அனைத்துத் திசைகளிலிருந்தும் நல்ல செய்தியாகவே வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.