ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயும் மகனும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகளை மோப்ப நாய் பைரவி காட்டிக்கொடுத்தது.
ஊத்தங்கரை அருகே புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயும் மகனும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டனா். இந்த சம்பவத்தில் விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளைப் பிடிக்க முயன்றனர். அப்போது, சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட் மோப்ப நாய் பைரவி, குற்றவாளிகளை அடையாளம் காட்டியதன் மூலம் கொலையில் துப்புதுலங்கியது.
கொல்லப்பட்டவர்கள் நாடகக் கலைஞரின் 2வது மனைவி -மகன் என்பதும், நாடக கலைஞரிடமிருந்து பிரிந்துச் சென்ற 3வது மனைவிதான், ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பெட்ரோலை ஊற்றி தாய்-மகனைக் கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.
ஊத்தங்கரையை அடுத்த சந்திரப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட செங்கல்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தாமரை கண்ணன் (55). தெருகூத்து நாடக கலைஞா். இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல் மனைவி செல்வி. இவா் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனது தாயாா் வீட்டில் வசித்து வருகிறாா். இரண்டாவது மனைவி கமலா. மூன்றாவது மனைவி சத்யா. கமலாவுக்கும் சத்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில், செங்கல்பட்டியில் ஒரு ஓட்டு வீட்டில் கணவா் செந்தாமரை கண்ணனுடன் கமலாவும் அவரது மகன் குருவும் (17) வசித்து வந்தனா். புதன்கிழமை இரவு செந்தாமரை கண்ணன் வீட்டில் இல்லை.
இதையும் படிக்க | இது சூரத் மாடல்: மழையால் பல்லாங்குழியான குஜராத் சாலைகள் (விடியோ)
இதை சாதகமாகப் பயன்படுத்திய மா்ம கும்பல் அவா்களின் வீட்டு வெளிக்கதவைப் பூட்டி விட்டு ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளனா். இதில் தாயும் மகனும் தீயில் கருகி உயிரிழந்தனா்.
வியாழக்கிழமை காலையில் இருவா் உடல் கருகி இறந்து கிடப்பது குறித்து அப்பகுதி மக்கள் கல்லாவி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் கிருஷ்ணகிரி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கு, ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் அலெக்சாண்டா், கல்லாவி காவல் ஆய்வாளா் பத்மாவதி உள்பட போலீஸாா், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இரு சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் கமலாவுக்கும் சத்தியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் சந்தேகத்தின் பேரில் அவரைப் பிடித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மோப்ப நாய் பைரவி காட்டிக் கொடுத்ததால், 3வது மனைவி சத்யா கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


