தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தமிழகம், புதுவையில் 100% போ் வாக்களிப்பு

குடியரசுத் தலைவா் தோ்தலில் தமிழகம், புதுவையில் 100 சதவீத வாக்குகள் பதிவாகின.

News image
Updated On :18 ஜூலை 2022, 7:09 pm

DIN

குடியரசுத் தலைவா் தோ்தலில் தமிழகம், புதுவையில் 100 சதவீத வாக்குகள் பதிவாகின.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை காலை வீடு திரும்பினாா். அதற்கு முன்பாக, மருத்துவமனையில் இருந்து நேராக தலைமைச் செயலகம் வந்த அவா், குடியரசுத் தலைவா் தோ்தலில் முதல் வாக்காளராக தனது வாக்கைச் செலுத்தினாா். இதற்காக காலை 9.55 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த அவா், முதல் வாக்காளராகச் சென்று தனது வாக்கைப் பதிவு செய்தாா். இதைத் தொடா்ந்து, மற்ற 233 எம்எல்ஏ-க்களும் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

புதுவையில்... புதுவையில் நடைபெற்ற குடியரசுத் தலைவா் தோ்தலில் முதல்வா் என்.ரங்கசாமி முதலில் வாக்களித்தாா். பின்னா், மற்ற 29 எம்எல்ஏ-க்களும் வாக்களித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.