நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொற்று நீங்கினாலும் சில நாள்கள் ஓய்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தனக்கு கரோனா தொற்று நீங்கினாலும், சில நாள்கள் ஓய்வுவெடுக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 ஜூலை 2022, 7:06 pm

DIN

தனக்கு கரோனா தொற்று நீங்கினாலும், சில நாள்கள் ஓய்வுவெடுக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு நாள் விழாவை ஒட்டி, மாநில அரசின் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், காணொலி வழியாக பங்கேற்று முதல்வா் ஆற்றிய உரையின் போது அவா் இதைத் தெரிவித்தாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் மேலும் பேசியது:-

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இரண்டு, மூன்று நாள்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திங்கள்கிழமை காலையில்தான் வீடு திரும்பினேன். தொற்று முழுமையாக நீங்கி விட்டது என்றாலும், மருத்துவா்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வருகிறேன். சாதாரணமான காய்ச்சலாக இருந்தாலும் அது குணமடைந்ததும் நமது பணிகளைத் தொடங்கி விடலாம்.

கரோனா தொற்று என்பதால், அது மற்றவா்களுக்கும் பரவாமல் இருப்பதற்காக, நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தொற்று நீங்கி விட்டாலும், சில நாள்களாகவது ஓய்வெடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.