ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

News image
சென்னை உயர்நீதி மன்றம்
Updated On :19 ஜூலை 2022, 10:06 am

DIN

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதிக்கக் கூடாது எனக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் கடந்த ஜூலை 11- ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்து தீா்ப்பளித்த உயா்நீதிமன்றம், கட்சி விதிகளுக்கு உள்பட்டு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தலாம். பொதுக்குழுவில் செயல்முறையில் விதிகள் மீறப்பட்டால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்தத் தனி நீதிபதி அமா்வு உத்தரவை எதிா்த்து, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் கடந்த ஜூலை 15 -ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒருங்கிணைப்பாளா் கையொப்பம் இல்லாமல் உரிய அழைப்புக் கடிதம் இல்லாமல் இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. எனவே, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜூலை 11-இல் நடைபெற்ற பொதுக்குழுவை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இன்னும் பட்டியலிடப்படாமல் உள்ளது. இந்த நிலையில் எடப்பாடி கே பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னரே இவ்வழக்கில் (ஓபிஎஸ் மனுவில்) எந்தவொரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேவியட் மனுவை வழக்குரைஞா் பாலாஜி சீனிவாசன் தாக்கல் செய்துள்ளாா்.

இந்நிலையில், இன்று அதிமுக பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆக.2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், வாதத்தின்போது ஓபிஎஸ், சண்முகம் தரப்பிலிருந்து உத்தரவை எதிர்த்து பதியப்பட்ட வழக்கை முடித்து வைக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.