பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

அகில இந்திய கராத்தே: தங்கம் வென்ற மானாமதுரை வீராங்கனைக்கு வரவேற்பு

அகில இந்திய கராத்தே போட்டியில் முதலிடத்தை பெற்று தங்கம் வென்று செவ்வாய்கிழமை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை திரும்பிய இளம்  வீராங்கனைக்கு ரயில் நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. 

அகில இந்திய கராத்தே போட்டியில் தங்கம் வென்று மானாமதுரை திரும்பிய இளம் வீராங்கனை பிரியதர்ஷினி மற்றும் பயிற்சியாளர் சிவ நாகார்ஜுன் உள்ளிட்ட வீரர்களுக்கு ரயில் நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.

Published On :

மானாமதுரை: சத்தீஸ்கர் மாநிலத்தில் அகில இந்திய கராத்தே போட்டியில் முதலிடத்தை பெற்று தங்கம் வென்று செவ்வாய்கிழமை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை திரும்பிய இளம்  வீராங்கனைக்கு ரயில் நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. 

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஷ்பூரில் அகில  இந்திய கராத்தே விளையாட்டுக் கழகம் சார்பில்  கடந்த வாரம் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்க மானாமதுரை நாகர்ஜூன் சிட்டோரியோ    கராத்தே பயிற்சி பள்ளியைச் சேர்ந்த பிரியதர்ஷினி, ரதீபா, கவினேஷ், டிக்ஸன் ஆகிய நால்வரும் பள்ளியின் தலைமைப் பயிற்சியாளர் சிவ. நாகர்ஜுன் தலைமையில் சென்று பங்கேற்றனர்.  

போட்டியில் கட்டாப் பிரிவு கராத்தே போட்டியில் இளம் வீராங்கனை பிரியதர்ஷினி(12) முதல் இடத்தைப்  பெற்றார். இவருக்கு பரிசாக தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து ரயில் மூலம் மானாமதுரை திரும்பிய பயிற்சியாளர் சிவ நாகர்ஜூன் தங்கப்பதக்கம் வென்ற இளம்  வீராங்கனை ஏ.பிரியதர்ஷினி மற்றும் போட்டியில் பங்கேற்ற ரதிபா,கவினேஷ், டிக்ஸன் ஆகியோருக்கு கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து வரவேற்பளித்தனர். 
தங்கப்பதக்கம் வென்ற பிரியதர்ஷினிக்கு மானாமதுரை பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.