கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடக்கவிருந்த குரூப்-4 தேர்வு மையம் நிர்வாக காரணங்களால் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெற்ற கலவரத்தில் பள்ளி வளாகம் முழுவதும் சூறையாடப்பட்டது. இதில் பொதுமக்கள், காவலர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வு நிர்வாக காரணங்களால் அந்த பள்ளியில் நடைபெறாது. அதற்கு பதிலாக வேறு பள்ளியில் நடைபெறும் என தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.
அருகிலுள்ள ஏகேடி மெட்ரிக் பள்ளியில் நடைபெறுமென அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.