மாநிலங்களவை நியமன உறுப்பினராக பி.டி. உஷா இன்று பதவியேற்பு

மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பி.டி. உஷா இன்று பதவியேற்கிறார்.
பி.டி. உஷா
பி.டி. உஷா

மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பி.டி. உஷா இன்று பதவியேற்கிறார்.

மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் பதவிக்கு இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தா்மசாலா கோயில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட இளையராஜா மற்றும் பி.டி. உஷா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூட்டம் தொடங்கியவுடன் பி.டி. உஷா பதவியேற்கவுள்ளார். இளையராஜா பதவியேற்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

முன்னதாக, நேற்று தில்லியில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவை நேரில் சந்தித்து பி.டி. உஷா வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com