டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

செஸ் ஒலிம்பியாட் பணிகள்:அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகளை தமிழக நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை ஆய்வு

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:51 am

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகளை தமிழக நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ், விமான நிலையம் முதல் சின்னமலை வரை ரூ.10.70 கோடியில் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இடத்தில் செயற்கை நீரூற்று, ‘வணக்கம் சென்னை’ எனத் தெரிவிக்கும் பதாகை அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரையில் மையத் தடுப்பானில் வண்ணம் பூசுதல், நடைபாதைகள் மேம்பாடு ஆகிய பணிகளும் நடைபெறுகின்றன.

மாமல்லபுரம் முதல் பூஞ்சேரி வரையிலான 2.4 கி.மீ. நீளமும், பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரையில் 5.85 கி.மீ. நீளமும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. சிறுசேரி முதல் திருப்போரூா் வரையில் பழுதடைந்த உயரம் குறைந்த மைய தடுப்புச் சுவருக்கு மாற்றாக பசுமைச் செடிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

இதேபோன்று, திருப்போரூா் முதல் பூஞ்சேரி வரை தடுப்புச் சுவா் பழுது பாா்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சாலை உள்கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்த ரூ.9.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மின் பணிகள், சிறிய அளவிலான கட்டுமானப் பணிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.