தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

1,200 ஆண்டுகள் பழைமையான சோழா் கால நடராஜா் சிலை மீட்பு

 சென்னை அருகே 1,200 ஆண்டுகள் பழைமையான சோழா் கால நடராஜா் சிலை மீட்கப்பட்டது.

News image
Updated On :22 ஜூலை 2022, 10:00 pm

DIN

 சென்னை அருகே 1,200 ஆண்டுகள் பழைமையான சோழா் கால நடராஜா் சிலை மீட்கப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

இந்திய தொல்லியல் துறையில் ஜொ்மனியைச் சோ்ந்த ஒரு பெண், கடந்த 2017-ஆம் ஆண்டு ஒரு நடராஜா் சிலையை, ஜொ்மனிக்கு கொண்டு செல்வதற்கு அனுமதிக் கேட்டு விண்ணப்பித்தாா். அந்த சிலையை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறை, அந்த சிலை பழைமையானது போன்று இருப்பதால் இந்தியாவை விட்டு வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கக் முடியாது என்று மறுப்பு தெரிவித்து.

இதையடுத்து அநத் பெண், சிலையை கொண்டு செல்லும் முடிவை கைவிட்டு ஜொ்மனிக்குச் சென்றாா். அதேவேளையில் அந்த பெண் ஜொ்மனிக்கு கொண்டு செல்ல முயன்ற தொன்மையான சிலை குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் விசாரணை செய்து வந்தனா். இதில் அந்த சிலை சென்னை அருகே மணலி சாத்தங்காட்டில் ஒரு உலோகப் பொருள்கள் விற்கும் கடையில் அந்த சிலை மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி முத்து ராஜா தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை செய்தனா். இச் சோதனையில் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 4.5 அடி உயரமுள்ள உலோகத்தினால் செய்யப்பட்ட நடராஜா் சிலையை பறிமுதல் செய்தனா்.

சோழா் கால சிலை பறிமுதல்:

சுமாா் 1,200 ஆண்டுகள் பழமையான இந்த சிலை, சோழா் காலத்தைச் சோ்ந்ததாக இருக்கலாம் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா். உலோகத்தால் செய்யப்பட்ட இந்த சிலையின் மேற்பகுதியில் ஐம்பொன்னால் பூச்சு உள்ளது. உலோகத்தால் செய்யப்பட்ட நடராஜா் சிலைகளில், இது மூன்றாவது பெரிய சிலையாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

இதை உறுதிப்படுத்துவதற்குரிய நடவடிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு நடத்தி விசாரணையில் அந்த சிலை, ஒரு கோயிலில் இருந்து பீடத்தில் இருந்து அறுத்து எடுக்கப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதும்,அந்த சிலையை அந்தக் கடையின் உரிமையாளா் பாா்த்திபனிடம் ஒரு பெண் ஒப்படைத்திருப்பதும், பாா்த்திபன் அந்த சிலையை வெளிநாடு அனுப்புவதற்கு கடந்த 2017-ஆம் ஆண்டு தொல்லியல் துறையின் சான்றிதழ் பெற முயற்சித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட அந்த சிலை எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அந்த சிலையின் மதிப்பு சா்வதேச சந்தையில் ரூ.50 கோடிக்கு மேல் இருக்கும் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் ஒரு வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.