தில்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்துக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தில்லி புறப்பட்டார்.


குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்துக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தில்லி புறப்பட்டார்.
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. அதையொட்டி, அவருக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி தில்லியில் இன்று(வெள்ளிக்கிழமை)நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கூட்டணிக் கட்சித் தலைவா்களுக்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, அதையேற்று எடப்பாடி பழனிசாமி இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
இதற்காக இன்று காலை அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். நிகழ்ச்சிக்குப் பின், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிக்க | குடியரசுத் தலைவரானார் திரௌபதி முர்மு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...