ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் தீ: ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது. 

News image
இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடையில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்.
Updated On :22 ஜூலை 2022, 6:58 am

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது. 

கிருஷ்ணகிரி மேற்கு இணைப்பு சாலையில் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை செயல்பட்டு வருகிறது.  இதன் உரிமையாளர் பாஸ்கர். 

இந்தக் கடையில் இருந்து வியாழக்கிழமை இரவு கரும் புகை வருவதை கண்டு அருகில் இருந்தவர்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடை முழுவதும் பரவிய தீயை இரண்டு மணி நேரம் போராடி அணைத்தனர். மேலும், அருகிலுள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.

Story image

தீப்பற்றி எரியும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை

இந்த தீ விபத்தில் இருசக்கர வாகனங்கள், உதிரி பாகங்கள், எண்ணெய் பொருள்கள் எரிந்து நாசமானது. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.  

மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.  

இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.