மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாக்கு 35,237 கன அடியாக சரிந்தது.


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 35,237 கன அடியாக சரிந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளுக்கு வரும் நீர்வரத்து சரிந்தது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்ததன் காரணமாக அங்கிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 35,237 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 37,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 14,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120.25 அடியாகவும் நீர் இருப்பு 93.87 டிஎம்சியாகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...