47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம்

நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணி நடைபெறுகிறது. 

News image
நீடாமங்கலம்  சந்தானராமசுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள சீதா,லட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர்.
Updated On :23 ஜூலை 2022, 4:10 am

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் சந்தானராமசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் ஆவணி மாதம் (செப்டம்பர் மாதம்) நடைபெறவுள்ளதையொட்டி திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மரால் 1761ல் நீடாமங்கலத்தில் சந்தானராமசுவாமி கோயில் கட்டப்பட்டது. கோயிலைக் கட்டிய மன்னர் திருக்கோயி்ல் முன்பு அழகிய குளத்தையும் அமைத்துத் தந்தார். மன்னர் தம்பதியருக்கு புத்திர பாக்கியம் அருளியதால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளதாக வரலாறு.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதரால் பாடல் பெற்றது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ரோகிணி நட்சத்திரத்தன்று புத்திர சந்தானஹோமம் செய்து சீதா,லட்சுமண, அனுமன் சமேத சந்தானராமரை வழிபட்டு குழந்தை வரம் பெறுவது வழக்கமாகவுள்ளது. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கடந்த 2006 ம் ஆண்டு தொல்லியல் துறை நிதி மூலம் திருப்பணி நடைபெற்று மகாகும்பாபிஷேகம் நடந்தது. மீண்டும் 16 வருடங்களுக்குப் பிறகு முழுக்க முழுக்க பக்தர்களின் உபய திருப்பணியாக நடைபெற்று வருகிறது.

வருகிற ஆவணி மாதம் (செப்டம்பர் மாதம்) கும்பாபிஷேகம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.  ஆன்மீக மெய்யன்பர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து ஶ்ரீராமன் திருவருளைப்பெற நீடாமங்கலம் ஶ்ரீசந்தானராமர்சேவா டிரஸ்ட் அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புக்கு-9488109428,9842294208,9444854208.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.