மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மாநிலங்களவை எம்.பி.யாக நாளை பதவியேற்கிறார் இளையராஜா

இளையராஜா நாளை மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளார்.

News image
Updated On :24 ஜூலை 2022, 10:43 am

இளையராஜா நாளை மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தா்மசாலா கோயில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பிக்களாக அண்மையில் நியமிக்கப்பட்டனர். 

கடந்த திங்களன்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டோர் மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் அன்றைய தினம் இளையராஜா எம்.பி.யாக பதவியேற்கவில்லை. 

அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றதால், இளையராஜாவால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில் இளையராஜா நாளை மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளார். இதற்காக அவர் இன்று தில்லி புறப்பட்டு சென்றார். 

தில்லி விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.