தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

நாமக்கல்லில் பெரியார் சிலை திடீர் சேதம்: போலீசார் விசாரணை

நாமக்கல்லில் உள்ள பெரியார் உருவச்சிலை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் சரக்கு வாகனம் மோதியதில் திடீரென சேதமடைந்தது. இதனையடுத்து அங்கிருந்தோர் தார்ப்பாய்க் கொண்டு அச்சிலையை மூடினர்.

News image

நாமக்கல்லில் சேதமடைந்த பெரியார் சிலையை நெகிழி தார்ப்பாய்க் கொண்டு மூடும் பொதுமக்கள்.

Updated On :24 ஜூலை 2022, 2:04 pm

நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள பெரியார் உருவச்சிலை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் சரக்கு வாகனம் மோதியதில் திடீரென சேதமடைந்தது. இதனையடுத்து அங்கிருந்தோர் தார்ப்பாய்க் கொண்டு அச்சிலையை மூடினர்.

நாமக்கல் நகரப் பகுதியில் நேதாஜி சிலைக்கு எதிரில், பல ஆண்டுகளுக்கு முன் அதிமுக சார்பில் சிறிய வடிவிலான பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகள் வைக்கப்பட்டன. அந்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்களில் அதிமுகவினர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6 மணியளவில் பெரியார் சிலை மட்டும் திடீரென சேதமடைந்தது. சரக்கு வாகனம் ஒன்றின் ஓட்டுநர் வாகனத்தை பின்னால் எடுத்தபோது சிலை சேதமாகி விட்டதாக கூறப்படுகிறது. அந்த சரக்கு வாகனம் அங்கிருந்து சென்று விட்டது. 

பெரியார் சிலை சேதமடைந்ததும் அங்கிருந்தோர் உடனடியாக நெகிழி தார்ப்பாய்க் கொண்டு சிலையை மூடினர். 

இது குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். வாகனம் மோதி சிலை சேதமானதா? அல்லது வேண்டுமென்றே யாரேனும் சேதப்படுத்தினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.