திரௌபதி முா்முவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முா்மு இன்று பதவியேற்றுக்கொண்டார். திரௌபதி முா்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள், ஆளுநா்கள், மாநில முதல்வா்கள், முப்படை தலைமை தளபதிகள்-மூத்த தளபதிகள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.
குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள திரெளபதி முர்முவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு அதிமுக சார்பில் அதன் இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...