ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தமிழக மீனவா்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

News image
Updated On :25 ஜூலை 2022, 6:39 pm

DIN

இலங்கையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து அவா், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு திங்கள்கிழமை எழுதிய கடிதம்: ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கடந்த 20-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவா்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். இப்போது தமிழகத்தைச் சோ்ந்த 92 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசமுள்ளன. அவற்றில் சில படகுகள் 2018-ஆம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்டதால், அவை முற்றிலும் சேதம் அடையக் கூடும். படகின் உரிமையாளா்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, படகுக்கான உரிமையைக் கோர வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நிபந்தனையின் பேரில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களும் விடுவிக்கப்பட்டனா். இப்போது, இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவா்களால் அந்த நாட்டு நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவா்களையும் மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசின் உயா்நிலை அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

மீன்பிடிப் படகின் உரிமையாளா்கள், இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்ட 18 மீனவா்களை சொந்த நாட்டுக்கு அழைத்துவர உதவியதற்காக தங்களுக்கு நன்றி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.