செஸ் ஒலிம்பியாட் போட்டி: 4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை (ஜூலை 28) நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை விடப்பட்டுள்ளது.


செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை (ஜூலை 28) நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பொதுத் துறைச் செயலாளா் டி.ஜகந்நாதன் வெளியிட்ட உத்தரவு:
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவையொட்டி, சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கலாம் என தமிழ்நாடு அரசை விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளா் கேட்டுக் கொண்டிருந்தாா். அவரது கோரிக்கையை பரிசீலித்து, வரும் வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக. 27-ஆம் தேதி (நான்காவது சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...