செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து நேரு உள்விளையாட்டரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இதையொட்டி தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் தொடக்கவிழா நாளை (ஜூலை 28) மாலை, சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநயத்துடன் பாரம்பரிய முறையில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, தொடக்க விழாவுக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இன்று காலை நேரு ஸ்டேடியத்திற்கு வந்த அவர் அதிகாரிகளிடம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அமைச்சர்கள் மெய்யநாதன், எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கனடா பிரதமர் இந்தியா வருகை! மும்பையில் உற்சாக வரவேற்பு!

நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்! விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
வெல்லமண்டி என். நடராஜன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்!
இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! என்ன காரணம்?
வீடியோக்கள்
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

