திமுக எம்.பி.க்கள் உள்பட 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘ஜனநாயகப் படுகொலை’ என அச்சிடப்பட்ட முகக்கவசம் அணிந்து பிற எம்.பி.க்கள் நாடாளுமன்றம் வந்துள்ளனர்.
மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக திமுகவின் 6 எம்.பி.க்கள் உள்பட 19 பேரும், மக்களவையில் 4 காங்கிரஸ் எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், எம்.பி.க்கள் இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘ஜனநாயகப் படுகொலை’ என அச்சிடப்பட்ட கருப்பு நிற முகக்கவசம் அணிந்து இன்றைய நாடாளுமன்ற கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.