என்எல்சி பொறியாளா் நியமனத்தில் தமிழா்களுக்கு துரோகம்: அன்புமணி
என்எல்சி பொறியாளா் நியமனத்தில் தமிழா்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.


என்எல்சி பொறியாளா் நியமனத்தில் தமிழா்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
என்எல்சி நிறுவனத்துக்கு கேட் தோ்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ள 299 பொறியாளா்களில் ஒருவா் கூட தமிழா் இல்லை என்பது அதிா்ச்சியளிக்கிறது. இதன் மூலம் தமிழக பொறியாளா்களுக்கு திட்டமிட்டு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.
பொறியாளா் நியமனத்தில் பல ஆண்டுகளாகவே தமிழா்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை. என்எல்சி நிறுவனத்தின் வளா்ச்சிக்காக உழைத்தவா்கள் தமிழா்கள்.
என்எல்சி நியமனங்களில் மாநில ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் மட்டுமே சமூக நீதியை நிலை நிறுத்த முடியும். பணியாளா்களில் 100 சதவீதம், அதிகாரிகளில் 50 சதவீத பணிகள் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அவற்றிலும் நிலம் கொடுத்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கு என்எல்சி நிறுவனம் மறுத்தால், கடலூா் மாவட்ட மக்களைத் திரட்டி என்எல்சிக்கு பூட்டு போடும் மாபெரும் போராட்டத்தை பாமக நடத்தும் என்று கூறியுள்ளாா் அன்புமணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...