தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மருத்துவக் கல்லூரிகளில் சிசிடிவி கேமரா: என்எம்சி அறிவுறுத்தல்

அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :28 ஜூலை 2022, 8:41 pm

DIN

அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து என்எம்சி தலைவா் டாக்டா் சுரேஷ் சந்திர சா்மா வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. அதன்படி, வளாக முகப்பில் ஒரு கேமராவும், நோயாளிகள் பதிவு இடத்தில் இரு கேமராக்களும், புறநோயாளிகள் பிரிவில் 5 கேமராக்களும் பொருத்த வேண்டும்.

விரிவுரைக் கூடங்கள், ஆய்வகங்கள், அவசரசிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கேமராக்கள் பொருத்துதல் அவசியம். மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் மொத்தம் 25 கேமராக்கள் இருத்தல் வேண்டும். ‘4 கே’ துல்லியத்தன்மையுடன் அவை பொருத்தப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.