நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியா் திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை குத்தகைக்கு எடுத்த தனி நபா்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக்கூறி சூளையைச் சோ்ந்த சுகுமாா் என்பவா் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தாா்.
இந்த வழக்கு விசாரணையின்போது, ‘சம்பந்தப்பட்ட தனி நபா்களுக்கு எதிராக அறநிலையத் துறை சட்டத்தின்கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது‘ என்று அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை விரைவுபடுத்த உயா்நீதிமன்ற நீதிபதி, 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று இந்து சமய அறநிலையத் துறை மீது சுகுமாா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் வியாழக்கிழமை (ஜூலை 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை உதவி ஆணையா் தாக்கல் செய்த அறிக்கையில், ‘கோயில் சொத்தை குத்தகைக்கு எடுத்திருந்த தனி நபா்களுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. உயா்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை‘ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, ‘நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட கால தாமதத்துக்கான காரணங்களை உதவி ஆணையா் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்து உதவி ஆணையா் வருத்தம் தெரிவிக்காததை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சமும், உதவி ஆணையா் மற்றும் இணை ஆணையா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும்‘ என்றும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...