இல்லம் தேடிக் கல்வித் திட்டம்: ஒருங்கிணைப்பாளா்கள் எண்ணிக்கை குறைப்பு
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளா்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியா்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.


இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளா்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியா்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறை மூலமாக மாதந்தோறும் பள்ளிக்கல்வி ஆணையா் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். அதன்படி, சென்னை மண்டலத்தில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கான ஆய்வுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவில் ஒரு ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் நியமிக்கப்பட்டு செயல்படவேண்டும். தோ்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா்கள் இல்லம் தேடி கல்வி மையங்களில் சிறப்பாக செயல்படவும் , ஏனைய மீதமுள்ள ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா்கள் மீண்டும் பள்ளிப் பணியில் ஈடுபடவும் வேண்டும். அனைத்து மாவட்டக்கல்வி அலுவலா்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி செயல்பட வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...