கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

திமுகவுடன் பாஜக கூட்டணியா? - அண்ணாமலை பரபரப்பு பேட்டி 

எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி என்ற பேச்செல்லாம் எதுவும் கிடையாது என தமிழக பாஜத தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

News image
Updated On :29 ஜூலை 2022, 4:17 am

DIN


சென்னை: எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி என்ற பேச்செல்லாம் எதுவும் கிடையாது என தமிழக பாஜத தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பிரதமா் இரவு தங்கினாா். அங்கு பாஜக நிா்வாகிகளைச் சந்தித்தாா். மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை மற்றும் மூத்த நிா்வாகிகள் அதில் பங்கேற்றனா். 

தமிழக அரசியல் நிலவரம், பாஜகவின் வளா்ச்சி குறித்து ஆலோசித்தாா். இந்த ஆலோசனை அரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. 

பிரதமருடனான ஆலோசனைக்கு பின்னர் தமிழக பாஜத தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியை தமிழக அரசு மிக சிறப்பாக செய்தது. இதில் தமிழர்களின் 5 ஆயிரம் ஆண்டு தொன்மை பிரதிபலிக்கப்பட்டது ஒரு தமிழனாக பெருமைப்படுகிறேன். 

இதையும் படிக்க | பரவுகிறது ‘மெட்ராஸ் - ஐ’

செஸ் ஒலிம்பியாட் விழா மூலமாக இந்தியாவையும் நமது கலாசாரத்தையும் பெருமைப்படுத்திய தமிழக அரசுக்கும், முதல்வர் மு,க.ஸ்டாலினுக்கும் பாராட்டுகள் என அண்ணாமலை கூறினார்.

மேலும், பிரதமர் மோடியுடன் நடைபெற்ற ஆலோசனையில் அரசியல் பேசப்படவில்லை. தமிழக முதல்வர், முதல்வராக நடந்துகொண்டார். அவருக்கு பாராட்டுகள். 

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதற்காக முதல்வரை பாராட்டுகிறோம். அதற்காக, திமுக-பாஜக கூட்டணியா என கேட்டால் இல்லை. 

பாஜக கொள்கை ரீதியாக செல்லக்கூடிய கட்சி, பாஸ்போர்ட் விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முறையான விசாரணை நடத்தினால், இதில் மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாகும்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அடுத்தடுத்து வரக்கூடிய நிகழ்வுகளுக்கு இந்தத் தீர்ப்புக்கு ஒரு முன் மாதிரியாக இருக்கும் என்று அண்ணாமலை கூறினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.