நெல்லை அருகே சவுக்கு கம்புகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்ததில் லாரிக்கு அடியில் சிக்கிய ஆசிரியையின் கணவர் பலியானார். இதுகுறித்து பதைபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் இருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கு சவுக்கு கம்புகளை ஏற்றி வந்த லாரி ஒன்று புதன்கிழமை முன்தினம் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தது. வள்ளியூரை சேர்ந்த இம்மாணுவேல் லாரியை ஓட்டி வந்தார். லாரி நெல்லை கங்கைகொண்டான் சோதனை சாவடி அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின்னல் வேகத்தில் லாரி சென்ற போது எதிரே இருந்த பேரிகார்டரில் மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் அடித்தபோது லாரி திடீரென சறுக்கி தலைகீழாக கவிழ்ந்தது.
அப்போது லாரிக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியைச் சேர்ந்த மதியழகன் லாரிக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். இவரது மனைவி சாத்தூரில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
இதையும் படிக்க | திமுகவுடன் பாஜக கூட்டணியா? - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கங்கைகொண்டான் காவல்துறையினர் மதியழகன் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் இம்மாணுவேலிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி சறுக்கி கவிழ்வது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ள காட்சி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


