
இஸ்லாமியர்களின் புத்தாண்டு பிறப்பையொட்டி, நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நபிகள் நாயகம் (ஸல்) மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புறப்பட்டுச் சென்ற நாளை, 'ஹிஜ்ரி' எனப்படும் ஆண்டுப் பிறப்பாக இஸ்லாமியர்கள் கொண்டாடடுகின்றனர்.
அதன்படி, சனிக்கிழமை இரவு மொஹரம் பிறை தெரிந்ததையொட்டி, 'ஹிஜ்ரி' ஆண்டுப் பிறப்பை இஸ்லாமியர்கள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.
இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. திரளானோர் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர். இஸ்லாமிய புத்தாண்டு எல்லோருக்கும் நலங்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக அமைய பிரார்த்திக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.