தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி ஒப்படைக்கப்பட்டது. கொடியை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி வழங்கும் விழா எழும்பூர் ராஜரத்தினம் திடலில் இன்று (ஜூலை 31) நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் காவல் துறை சார்பில் வெங்கையா நாயுடுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜிவால் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் குடியரசுத் தலைவர் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வெங்கையா நாயுடு வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.