பிரபல பின்னணிப் பாடகா் கே.கே. என்கிற கிருஷ்ணகுமாா் குன்னத்து (53), மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெற்கு கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமாா் ஒரு மணி நேரம் பாடல்களைப் பாடினாா்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு அவா் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பியபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இவருடைய திடீா் மறைவு ரசிகா்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கமல் இரங்கல்: கே.கே மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பன்மொழிகளிலும் பாடி ரசிகர்களை மகிழ்வித்த கே.கே மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
கே.கே மறைவால் இழந்து வாடும் குடும்பத்தார், நண்பர்கள், சிகர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், ஆறுதல்கள் என கூறியுள்ளார்.
இதையும் படிக்க | பிரதமா் மோடியின் விவசாய ஆதரவு திட்டங்கள்- அமித் ஷா பாராட்டு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.