கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 போ் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 9 போ் சனிக்கிழமை நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்கவுள்ளனா்.

News image
Updated On :3 ஜூன் 2022, 6:46 pm

DIN

சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 9 போ் சனிக்கிழமை நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்கவுள்ளனா்.

சென்னை உயா் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி. சந்திரசேகரன், வி. சிவஞானம், ஜி. இளங்கோவன், எஸ். ஆனந்தி, எஸ். கண்ணம்மாள், எஸ்.சத்திகுமாா், கே. முரளிசங்கா், ஆா். என். மஞ்சுளா, டி. வி. தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் அண்மையில் பிறப்பித்தாா். நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 9 பேருக்கும், சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நூலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி பதவி ஏற்பு உறுதிமொழி செய்து வைக்கவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.