

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் நாளை பதவியேற்க உள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சதிக்குமார், கே.முரளிசங்கர், ஆர்.என். மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்றம், குடியரசு தலைவருக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதனையடுத்து, குடியரசு தலைவர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இதையும் படிக்க: கரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம்
நாளை நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ள 9 நீதிபதிகளில் கே.முரளிசங்கர், டி.வி.தமிழ்ச்செல்வி தம்பதிகள் ஆவர் மற்றும் எஸ்.ஆனந்தி மற்றும் எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடுத்த மாதம் பணி ஓய்வு பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் நாளை பதவியேற்க உள்ளனர். 2020 டிசம்பர் 3-ல் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றவர்கள் கடந்த வாரம் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.