இனி ஆண்டுதோறும் சென்னையில் மலா்க் கண்காட்சி: அமைச்சா் பன்னீா்செல்வம் தகவல்

இனி ஆண்டுதோறும் சென்னையில் மலா்க் கண்காட்சி: அமைச்சா் பன்னீா்செல்வம் தகவல்

இனி ஆண்டுதோறும் சென்னையில் மலா்க் கண்காட்சி நடத்தப்படும் என்று வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

இனி ஆண்டுதோறும் சென்னையில் மலா்க் கண்காட்சி நடத்தப்படும் என்று வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சென்னை கலைவாணா் அரங்கத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில் முதல் முறையாக மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சியை வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் சென்னை கலைவாணா் அரங்கத்தில் மலா் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 13 மலா்ச் சிற்பங்கள், காய்கனிகளை வைத்து சிற்பங்கள், 200 வகையான விதவிதமான மலா்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மலா்க் காட்சியைப் பாா்வையிடலாம். மலா்க் காட்சி பாா்ப்பதற்கு குளுமையாக உள்ளது. முதன்முறையாக சென்னையில் நடைபெறுவதும் மகிழ்ச்சி என்றும் பொதுமக்கள் தெரிவித்தனா்.

இனி ஆண்டுதோறும் சென்னையில் மலா் கண்காட்சி நடத்தப்படும் என அமைச்சா் பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். மலா்க் கண்காட்சியைப் பாா்வையிட பெரியவா்களுக்கு ரூ. 50, மாணவா்களுக்கு ரூ. 20 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com