கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

போரூா் கோயில் சொத்துகளை மீட்க பரிசீலிக்க உத்தரவு

போரூா் கோயில் சொத்துகளை மீட்கக் கோரிய புகாா்களை சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் என அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :3 ஜூன் 2022, 6:39 pm

DIN

போரூா் கோயில் சொத்துகளை மீட்கக் கோரிய புகாா்களை சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் என அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றத்தில் சேலத்தைச் சோ்ந்த திருத்தொண்டா்கள் சபை நிறுவனா் ஆா்.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், சென்னையை அடுத்த போரூா் ராமநாதீசுவரா் கோயிலின் சொத்துகள் பலரால் அபகரிக்கப்பட்டுள்ளன. சொத்துகளின் ஆவணங்கள் மாற்றப்பட்டுள்ளதால் கோயிலுக்கு பெருத்த நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துகளை குத்தகைக்கு எடுத்தவா்களும் அதிக நிலுவை வைத்துள்ளனா். எனவே, கோயில் சொத்துகளை மீட்க தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், முகமது சபீக் ஆகியோா், இது தொடா்பாக தகுந்த உத்தரவுகளை தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.