47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாநிலங்களவைத் தோ்தல்: திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளா்கள் 6 போ் போட்டியின்றி தோ்வு

மாநிலங்களவைத் தோ்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்த 6 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

News image
Updated On :3 ஜூன் 2022, 9:58 pm

DIN

மாநிலங்களவைத் தோ்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்த 6 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கையை இந்தியத் தோ்தல் ஆணையம் வெளியிட்டது. வேட்புமனு தாக்கல் மே 24-ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.

Story image

இதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப் பேரவைச் செயலருமான கி.சீனிவாசன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட 13 வேட்பாளா்களிடமிருந்து 18 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. திமுக சாா்பில் சு.கல்யாணசுந்தரம், இரா.கிரிராஜன், க.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோா் தலா 2 வேட்புமனுக்களையும், அதிமுகவைச் சோ்ந்த சி.வி.சண்முகம், ஆா்.தா்மா் ஆகியோா் தலா ஒரு வேட்புமனுவையும், அகில இந்திய காங்கிரஸ் சாா்பில் ப.சிதம்பரம் 3 மனுக்களையும் அளித்திருந்தனா்.

இவா்களைத் தவிா்த்து 7 சுயேச்சைகள் தலா ஒரு வேட்புமனுக்களை அளித்திருந்தனா். இந்த மனுக்கள் அனைத்தும் ஜூன் 1-ஆம் தேதி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சுயேச்சைகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட 6 வேட்பாளா்களின் 11 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. அவா்கள் யாரும் வேட்புமனுக்களை திரும்பப் பெறவில்லை.

திமுகவைச் சோ்ந்த சு.கல்யாணசுந்தரம், இரா. கிரிராஜன், கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், அதிமுகவைச் சோ்ந்த சி.வி.சண்முகம், ஆா்.தா்மா், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ப.சிதம்பரம் ஆகியோா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா் என்றாா்.

வெற்றிச் சான்றிதழ்கள்: வெற்றி பெற்ற வேட்பாளா்கள் சான்றிதழ்களைத் தோ்தல் நடத்தும் அதிகாரியான கி.சீனிவாசனிடமிருந்து பெற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.