ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மண்சரிவில் சிக்கி தொழிலாளி பலி: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு அரசு

மதுரையில் பள்ளம் தோண்டும்போது மண்சரிவில் சிக்கி உயிரிழந்த சதீஷ் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :3 ஜூன் 2022, 3:52 pm

DIN

மதுரையில் பள்ளம் தோண்டும்போது மண்சரிவில் சிக்கி உயிரிழந்த சதீஷ் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மதுரை விளாங்கிடி கிராமத்தில் மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி  சதீஷ் எனும் தொழிலாளி உயிரிழந்தார். 

இந்நிலையில் எதிர்பாராத விபத்தால் உயிரிழந்த சதீஷின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சதீஷின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சமும், அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய நிதியிலிருந்து ரூ.5 லட்சமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.