எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சென்னையில் சொகுசு கப்பல் திட்டம்: இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொசுகு கப்பல் திட்டம் சென்னையில் இன்று சனிக்கிழமை(ஜூன் 4) தொடங்குகிறது. 

News image
கோர்டேலியா சொசுகு கப்பல்
Updated On :4 ஜூன் 2022, 5:00 am

DIN


தமிழ்நாட்டில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொசுகு கப்பல் திட்டம் சென்னையில் இன்று சனிக்கிழமை(ஜூன் 4) தொடங்குகிறது. 

சென்னை துறைமுகத்தில் இருந்து சொகுசு கப்பல் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வரையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டம் மற்றும் சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரிக்கு சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலாத் திட்டம் என இரண்டு பேக்கேஜ்களில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்பட உள்ளது. 

கோர்டேலியா கப்பல் என்ற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை செயல்படுத்துகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.